மகளிர்களுக்கான மாத உரிமை தொகை
ரூ1000/
யாருக்கு?
தேர்தலில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப தலைவிக்கு மட்டும்
தற்போது பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் உரிமைத் தொகை.
ஏன்? ஏன்? ஏன்?
இது என்ன உங்கள் வீட்டு பணமா?
மக்கள் வரிப்பணம் தானே நாங்கள் கொடுத்ததை எங்களுக்கு
திருப்பி கொடுக்க போகிறீர்கள்
இதில் என்ன பேதம்
எப்படியும் இந்த ஆயிரம் ரூபாயால் பல குடும்பங்களில் அடிதடி நடந்தேறப்போகிறது.
இந்த பணம்
உங்களின் மதுபானக்கடைக்கே வரப்போகிறது.
இதற்கு ஏன் இவ்வளவு ஆராய்ச்சி.
மக்களுக்கான அரசாக ஸ்டாலின் அரசு இருந்தால்
உரிமை தொகையை பணமாக தராமல்
ஒவ்வொரு ஏழ்மையான குடும்பத்திற்கும்
மாதம் தோறும்
தலா 20 கிலோ தரமான சாப்பாட்டு அரிசியை
வேளாண்மை விற்பனை துறை மூலம் வழங்கி வயிறார உணவு உண்பதற்கு உதவிட வேண்டும்
இதுவே உரிமை தொகையின் சரியான பயன்பாடாக இருக்க முடியும் என்று மனித நேயர் டாக்டர் நா. சு செல்வராஜ். சமூக சிந்தனையாளர் (தமிழ்நாடு) தனது அறிக்கையில் தெரிவித்தார்.
