சென்னை: உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தில் இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பு (ஐசிடபிள்யூ ஓ)சார்பில் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் எம். ஜி. ஆர். இரயில் நிலையத்தில் ஜ.சி.டபிள்.யூ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

பச்பன் பச்சோ அந்தோலன் மாநில ஒருங்கிணைப்பாளர் நத்தர்ஷா மாலிம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தென்னக ரெயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு பற்றி துண்டு பிரச்சுரம் மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டி வெளியிடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கலப்பை கிராமிய கலைக் குழுவினர் பறை இசை மூலம் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தென்னக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், முன்னாள்திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி ஆக்சிலியா, இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பு நிர்வாகிகள்,ஒயாசீஸ் தொண்டு நிறுவன நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகப்பணி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.



மேலும் இந்த குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடையே சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.
