கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரண விவாகாரத்தில் வெற்று சவுடால் அறிக்கை விடுவதா: அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் காட்டம்!
மதுரை:
கள்ளச்சாராயம் மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளையும், காவல்துறையின் சில கருப்பு ஆடுகளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்,கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர்கள் பலியாகி உள்ள துயரம் நிகழ்வு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது,
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம்,சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்,மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது,கள்ளச்சாராயம் விற்பனைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளையும்,காவல்துறையில்உள்ள சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ,கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டிருப்பது வேதனை தருகிறது,
மது இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும்,பூரண மதுவிலக்கே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று அதிமமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
கள்ளச்சாராய மரணங்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றுமாறு மருத்துவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மெத்தனால் விஷ சாராயம் குடித்து மரணம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது விஷ சாராயம் என்பது மெத்தனால் இதை மிகப்பெரிய நிறுவனங்களான எண்ணூர் அரிஹந்த் கெமிக்கல்ஸ், குஜராத் கெமிக்கல்ஸ் போன்ற குஜராத்தை சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்தும், சந்தைப்படுத்தியும் வருகிறது.
இந்த நிறுவனங்களை ஆராய்ந்தால் அவர்களை கட்டுப்படுத்தினாலே இப்படியான மரணங்களை தவிர்க்கலாம்,
சிறு ஏழைகளை கைது செய்து அதை பெரிய செய்தியாக்குவதை விட இதற்கான மூலம் எங்கே என்று ஆராய்ந்து கட்டுப்படுத்திட தமிழக அரசு முன் வர வேண்டும்.
இந்த நிறுவனங்களில் உற்பத்தி,விற்பனை இருப்பு விவரங்களை ஆய்வு செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.
இதற்காக தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வாதம் சொதப்பலானதாகும்.
அவர் முதல்வராக இருக்கும் போது தூத்துக்குடியில் 13பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது முதல்வர் பதவியை துறந்தாரா ? அதைப்போல அண்ணாமலையும் வெற்றுச்சவுடால் அறிக்கை விடுகிறார்,டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மடிந்த போது பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்தாரா ? தமிழகத்தில் வெள்ளம்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறாமலும், இறந்தவர்களுக்கு இரங்கல் அறிக்கை கூட விடாத பிரதமர் மோடி என்பதை அண்ணாமலை மறந்து விடலாம் தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் பாஜகவின் தமிழக படுதோல்வியாகும்,
ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்காமல் வெற்று அரசியல் நடத்திட முனையும் அதிமுக,பாஜகவை சேர்ந்தவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள், தமிழக முதல்வர் அவர்கள் தனி கவனம் செலுத்தி கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழித்து பூரண மதுவிலக்கை அமல்படுத்திட முனைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.
