தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில்
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு புகழஞ்சலி

திருவல்லிக்கேணி :
தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு. தன்னலமின்றி சேவை புரிந்து, தனது உயிரையும் பொருட்படுத்தாது அரும்பணியாற்றி வரும் மருத்துவர்களின் சேவைகளை போற்றும் விதமாகவும், கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருவல்லிக்கேணி,பாரதி சாலையிலுள்ள சங்க அலுவலகத்தில் இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். தனசேகரன் என்கிற அழகு தனா தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சங்கத்தின் தலைவர் எஸ்.பரமசிவம், துணைத் தலைவர்கள் எஸ்.சாய்குமாரி, எம்.நந்தகோபால், சி.என் நாகராஜ், பொருளாலர் பி.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டு கொரோனா ஆட்கொல்லி தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி புகழஞ்சலி செலுத்தினர்.