வேட்டை மிருகங்களிடம் இருந்து கால்நடைகளை காக்க ஆயர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதமே வளரி.வளரி மான்கொம்பு,யானைத்தந்தம்,மரம் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்டது.

ஆயர்கள் தங்களின் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தை போல எய்தவரிடமே திரும்பி வரும் வகையில் உருவாக்கப்பட்ட  ஆயுதம் வளரி தடி..

ஆயர்குல சிறார்கள், தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும் பொழுது அவைகளை விட்டு விலகிச்செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே கூட்டமாக வரும் ஓநாய்கள், நரிகள் போன்றவைகளை விரட்டுவதற்கும்,வேட்டையாடுவதற்கும்  வளரியை பயன்படுத்தினர்.

கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களை உயிருடன் பிடிக்க மரத்தால் ஆன வளரியைப் ஆயர்கள் பயன்படுத்தினர்.சிலநேரங்களில் கம்பில் இருக்கும் தொரட்டியையும், அருவாளையும் வளரியை போல் பயன்படுத்தினார்கள்.

ஆயர்வீட்டு திருமணங்களின் போது  ஆயர்மகன் கையில் வளரியுடன் வரும் வழக்கம் இன்றும் உள்ளது.திருமணம் முடிந்த பிறகு,ஆயர்மகள்வீட்டு மாட்டுமந்தைக்கு அழைத்துச் செல்லப்படும் மாப்பிள்ளை தன் திறமையால் மந்தைக்கு மேலே வளரியை எறிவார்.எறியப்பட்ட வளரி எதுவரை செல்கிறதோ அதுவரை உள்ள மாடுகள் மாப்பிளைக்கு சீதனமாக வழங்கப்படும்.

-மதுரை கா.ராஜேஷ்கண்ணா