சென்னை:நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசியுடன், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை தேமுதிக அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

இதில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பாபநாசம் சட்டமன்ற (172) தொகுதி வேட்பாளராக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியம், மெலட்டூர் பேரூர் கழகச் செயலாளர் கே.சந்தானகிருஷ்ணன் அவர்கள் இளையரணி செயலாளர் இளைய கேப்டன் விஜய பிரபாகரன் அவர்களிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் தாக்கல் தாக்கல் செய்தார்.கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

