சென்னை :
தமிழ்நாடு யூ பி.வி.சி. ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வடபழனியில் உள்ள தனியார் விடுதி அரங்கில் ஜே.ஏ பெஃன்ஸ்டிரேசன் ராஜேஷ் மற்றும் டி.எஸ் என்டர்பிரைசஸ் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும் இந்தகூட்டத்தில் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்கால நன்மைகள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக தங்கள் தொழிலில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்து தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொரோனா பெரும் தொற்று இக்கட்டான காலகட்டத்தில் பொது ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் பாதிக்கப்பட்டு, கேள்விக்குறியான வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தங்களுக்கு நிவாரணம் வழங்ககோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்க்கப்
பட்டது.