இதுகுறித்து இவ்வமைப்பின்  பொதுச் செயலாளர் டாக்டர்
ஜி. ஆர்.இரவீந்திரநாத்  அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியபோது:
ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில்,  ஓய்வு பெற்ற மூத்த தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்திடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.அதற்கான சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது,
இது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இது கடுமையான கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு மூத்த ஓய்வு பெற்ற மருத்துவருக்கும் தங்களின் ஓய்வூதியத்தில் மாதம் தோறும் ரூ 20 ஆயிரம் குறையும் என ஓய்வு பெற்ற மூத்த அரசு மருத்துவர்கள்
மிகுந்த வேதனையோடு  தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் 70 வயதிற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 850 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த மூத்த மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழிலும் ஈடுபடவில்லை.

எனவே இவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மருத்துவர்கள் தங்கள் குறைந்த பட்ச தேவைகளுடன் கௌரவமான வாழ்க்கையை மேற்கொள்வதை இந்த ஓய்வூதியக் குறைப்பு பாதிக்கும்.

இந்த மூத்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்க  கடந்த அஇஅதிமுக வின் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அரசு முயன்ற பொழுது, அவ்வாறு  குறைக்கக் கூடாது என 2020  ஆம் ஆண்டு ஜூலை  மாதம் ,இன்றைய முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்பொழுது ஆளும் தி.மு.க
அரசு இந்த  ஓய்வூதியக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது மிகுந்த வேதனையையும் ,வருத்தத்தையும்,கவலையையும்  அளிக்கிறது.

இது மூத்த மருத்துவர்களின் ஓய்வூதிய  உரிமை பறிப்பு நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.

மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக எனக் கூறி, வயது முதிர்ந்த
ஓய்வு பெற்ற மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது தவறு. அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலை செய்வது சரியல்ல. நியாயமல்ல. இது தவறான நடவடிக்கையாகும்.

இந்த அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கை ,மருத்துவர்கள் விரோதப் போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்து , மக்கள் நலத்திட்டங்களை மேற் கொள்ளப் போகிறோம் என்பது சரியல்ல. நியாயமல்ல.  இது தவறான வழிமுறையாகும்.

மக்களுக்கான நலத்திட்டங்கள் அவசியம். அதற்காக ஓய்வு பெற்ற மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது மனிதநேயமற்ற செயலாகும்.

இந்நடவடிக்கை மூலம், மக்களுக்கும் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கும் இடையே  மோதலை உருவாக்குவது சரியல்ல.

உடனடியாக இந்த ஓய்வூதியக் குறைப்பு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.