காட்டாங்கொளத்தூர்:எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்த முக்கிய நிகழ்வு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுத்திறன் வெற்றிக்கான ஓர் அடையாளமாகவும், தொழில்சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய தொடக்கமாகவும் அமைந்தது.

இந்நிகழ்வுப் பாரம்பரிய முறையில் தொடங்கப்பட்டது.

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர் பி. சிதம்பரராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம். முருகன் அவர்கள் பட்டமளிப்பு அறிக்கையை வழங்கி, கல்லூரியின் முக்கிய முன்னேற்றங்களையும் சாதனைகளையும் விவரித்தார்.

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் நிர்வாக அதிகாரி
ஆர். ஹரிணி அவர்கள் அகம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பைப் பாராட்டி பேசினர்.

மேலும்
அவர் தன் உரையில், மாணவர்கள் தங்கள் இலக்கினை எதிர்கொள்ளத் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஊக்கமளித்து பேசினார்.

மேலும் இந்நிகழ்வில்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)பயிற்சி நியமனத் தலைவர் ஜெய்சங்கர் தாமோதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு,
626 பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

இதில் அதிக மதிப்பெண் பெற்ற 42 சிறந்த மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் தன் உரையில், தொழில்நுட்ப உலகின் மாறுபடும் போக்குகளையும், நடைமுறை அறிவின் முக்கியத்துவத்தையும் சிறப்பாக விளக்கினார்.
20ஆவது பட்டமளிப்பு விழா மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் மிக முக்கிய நிகழ்வாகவும், அவர்களின் சீரிய எதிர்காலத்திற்கான ஒரு தொடக்கமாகவும் அமைந்தது.

இதன்மூலம் பட்டம் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்திற்கான புதியப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.

இந்நிகழ்வு தேசிய கீதத்துடன் நிறைவுப் பெற்றது.