பெரம்பூர் :
சீறும் சிலம்பம் பாரம்பரிய மற்றும் விளையாட்டு சிலம்பம் கழகம் ஆப் இந்தியா 3 விழுக்காடு சிலம்பத்திற்க்கு இட ஒதுக்கீடு தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 6 மாணவர்கள் 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியும் 3 வயது சிறுவன் 1 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாபெரும் உலக சாதனை படைத்து முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு பெரம்பூர் லெட்சுமி அம்மன் கோவில் அருகிலுள்ள கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

மேலும் சீறும் சிலம்பம் பாரம்பரிய மற்றும் விளையாட்டு சிலம்பம் கழகம் ஆப் இந்தியா சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் மாநில செயலாளரும், சென்னை மாவட்ட பொது செயலாளருமான கலாரத்தினா.ஆர்.சந்திரமோகன் பேட்டியில் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் சிலம்பம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து 3 சதவித இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். இதற்காக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நவம்பர் 14 ஆம் நாள் 6 மாணவர்கள், 10 மணிநேரம் இடைவெளி இல்லாமலும், 3 வயது சிறுவன் 1 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாபெரும் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

மேலும் இலவச சிலம்பம் பயிற்சிகள் மாதவரம், மாதவரம் பால் பண்ணை, பெரியார் நகர், ஐ.சி.எப். அரும்பாக்கம் உட்பட 8 பகுதி இடங்களில் இலவச பயிற்சி நடைபெற்றுவருகின்றது. இதில் சேர வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு விளையாட்டு சிலம்பம் கழகம் மாநில இணை செயலாளர் மற்றும் சென்னை மாவட்ட தொழில்நுட்பியக்குநர்
கலாரத்னா ஆசான் எஸ்.உதயகுமார், சீறும் சிலம்பம் சென்னை மாவட்ட பொது செயலாளர் வி.ஜெகதீஸ்வரன், சீறும் சிலம்பம் சென்னை மாவட்ட பொருளாளர் பி. கணேஷ் குமார், சென்னை மாவட்ட இணை செயலாளர் எல்.ஹரிபாபு சீறும் சிலம்பம் சென்னை மாவட்ட இணை செயலாளர் எ. ஆசிப், சீறும் சிலம்பம் சென்னை மாவட்ட செயற்குழு தலைவர் எ. புவேனேஷ்வரி, சீறும் சிலம்பம் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேவதி உட்பட பலர் இருந்தனர்.