நகரங்களில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மழையின்மையை போக்கும் விதமாக சென்னையின் மத்தியில் சிறு காடுகளை உருவாக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பன்னாட்டு அரிமா சங்கம் ( லயன்ஸ் கிளப்) ஈடுபட்டுள்ளது…

வியாசர்பாடி:
காந்தி ஜெயந்தி மற்றும் உலக காடுகள் தினத்தினை முன்னிட்டு சர்வதேச அரிமா சங்கத்தின் சார்பில் மழை மற்றும் இயற்கை வளத்தினை பெருக்கும் விதமாக 5000 மரகன்றுகள் நடும் விழா வியாசர் பாடியிலுள்ள ஜீவா ரெயில் நிலையம் அருகில் நடைபெற்றது…

மாணிக்க வனம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு காடுகள் உருவாக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 5000 மரக்கன்றுகள் நடப்பட்டது…

அத்திட்டத்தின் தலைவர் லயன் மோகனா ஞானவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சென்னை மாவட்ட ஆளுநர் லயன்எஸ்.வி.மாணிக்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மரகன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்…

இதன் மூலம் அடுத்த முன்று வருடங்களில் சென்னை மாநகராட்சியின் உதவியுடன் சிறிய அளவிலான காடுகள் உருவாக்கப்படும்…

மேலும் இந்த நிகழ்வில் லயன் நாகராஜன், கருணாநிதி, ரமேஷ் பாபு, சென்னை மநகராட்சி 6ம் மண்டலம் அதிகாரிகள் பரந்தாமன், செந்தில்நாதன், சரவணன் உள்ளிட்ட அரிமா சங்கத்தை சார்ந்த லயன் பிரகாஷ் குமார் , முகமது நவீன், ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்…