ராயபுரம் :முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள பனைமரத் தொட்டி பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ டிரீம்ஸ் மூர்த்தி ஆகியோர் இணைந்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை
வடச்சென்னை திமுக மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். மேலும் இந் நிகழ்வில் ராயபுரம் வட்டச்செயலாளர் செந்தில்குமார்,
சமூக சேவகர் டாக்டர்.சார்லஸ், லோகேஷ், ரவி, கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்…