இராயப்பேட்டை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரேட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் 10 ஆண்டையொட்டி முப்பெரும் விழா நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்,இலவச வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகள் இராயப்பேட்டையில் ரேட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் நந்தகோபால் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

ஜெயா டிவி புகழ் மற்றும் வி. பி.அறிவிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை செய்தி வாசிப்பாளர் முனைவர் மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற
இந்நிகழ்வில்
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். கே. கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான முனைவர் உத்தம் சந்த் கட்டாரியா, காந்திஜி பள்ளியின் தாளாளரும் புலவருமான சுகுமாரி அருணகிரி. சர்வதேச பாடி பில்டர் ரூபி,முன்னாள் காவல் அதிகாரி தாம்சன், லதாவாசன் தொழிலதிபர் ராஜு சடகோபன், அண்ணாசாலை காவல் ஆய்வாளர் வீராசாமி,செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்,பசுமை நாயகன் உமாநாத்,சமூக ஆர்வலர் பத்மபிரியா ராஜூ, செய்தி வாசிப்பாளரும்,
நடிகையுமான செல்வி ஜனனி, செல்வேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வை சமூக ஆர்வலர், பிரவீன்குமார் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ரேட் ஸ்ட்ரீட் ஊழியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் மரக்கன்று வழங்கபட்டது.

இந்நிகழ்வு சிறப்பாக நடைப்பெற ரேட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் அவர்களின் பெற்றோர்கள், தங்கை மற்றும் மனைவி ,ஊழியர்கள் பெரிதும் உற்ற துணையாக இருந்தனர்.