சூளை:
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 58 வது வார்டில், (சூளை ஏ.பி.ரோட்டில்) எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து(1கோடியே 12லட்சம்) ராகவேந்திரா மூலிகை பூங்கா மற்றும் பொழுது போக்கு பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்வில மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூலிகை பூங்காவை திறந்து வைத்தார்.

இதில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த பூங்காவின் சிறப்பம்சமாக அகத்திய முனிவர் தவம் இருக்கும் காட்சியுடன் 108 மூலிகைச் செடிகள் மற்றும் 27 நட்சத்திர செடிகள் அசத்தலாக கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். மேலும் இந்தப் பூங்காவின் உள்ளே இறகு பந்து விளையாட்டு திடலும் அமைந்துள்ளது.

இந்த மூலிகை பூங்காவை கலைநயத்துடன் வடிவமைத்தது ஜே.கே.கண்ஸ்ட்ரக்ஸன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஏ.ராஜ்குமார் (செய்தியாளர்)
96 77 34 91 96
