திருவள்ளூர்:
பர்ப்பிள் டாம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம், சூரப்பேட்டை பகுதியிலுள்ள அக்வா கிரீன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்டில் இதன் சி. இ. ஓ. தாமஸ் ராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்நிறுவனம் சார்பில் பழங்குடியின மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக நிதி திரட்டும் சமூக நோக்கில் தென்னிந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊதா நிற நவீன வடிவமைப்பு ஆடைகள் மற்றும் அலங்கார அணிகலன்கள் அணிந்து அணிவகுத்து வந்து வியப்பூட்டும் வண்ணம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சியை ஊக்குவித்து உலக சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திரை பிரபலங்கள்,
மாடலிங் நிறுவனங்கள்-
பள்ளிகள்,
ஒப்பனை கலைஞர்கள், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.