சென்னை:
நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் NBS அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ பேலஸ் ஹோட்டலில்
நம் பாரத சேவை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் டாக்டர் ந. பால சரவணன் அவர்களின் தலைமையில் உயரிய சிந்தனை மற்றும் மனிதநேயக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில்
இயன்முறை மருத்துவச் சிகிச்சையில் சிறந்து விளங்குவதற்காக மயிலாப்பூர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறக்கட்டளை மருத்துவமனையில் மருத்துவ சேவையாற்றி வரும் சென்னையை சேர்ந்த டாக்டர் காவ்யா அவர்களுக்கு
மருத்துவ சிகிச்சையையும் கடந்து குணப்படுத்துபவர், உயரிய நோக்கத்துடன் ஊக்கமளிப்பவர், மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பவர் ஒரு உண்மையான மருத்துவர் என்பதை வெகுவாக பாராட்டி அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
