சென்னை:
சிவசக்தி ஆன்மீக குழு சார்பில் அடியார்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் திருவாசகம் பாடல்கள் மற்றும் அங்காள பரமேஸ்வரி பக்தி பஜனை குழு மூலம் பக்தி பாடல்களின் பல்வேறு குழுக்களை அமைத்து ஆன்மீக சேவையாற்றி வரும் பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின்
திருவள்ளூர் மாவட்ட ஆன்மீக அணி பொது செயலாளரும், திருமுறை ஞானத் திருச்சபையின் உறுப்பினரும், தேசிய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவியுமான அடியார் திருமதி த.சிவ ரங்கநாயகி அவர்களுக்கு விவேக சைவ எழுச்சி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு இவரின் ஆன்மீக பொது நல சமூக சேவையை பாராட்டி சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


