சென்னை: குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் மற்றும் குளோபல் எஜுகேஷன் மிஷன் சார்பில் சென்னை நகரில் பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கல்வி, மருத்துவம், சமூக சேவை, ஆன்மீகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் சென்னை சிவில் நீதிமன்ற நீதிபரசர் திரு.கே. வெங்கடேசன் தலைமையில் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் திரைப்பட நடிகர் செந்தில், இயக்குநர் யார் கண்ணன், சின்னத்திரை நடிகை மனிஷா ஹரிதாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி, ஆர்.ஜே. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின். உரிமையாளர் திரு. ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு Glory of India Award, Seva Rathna Award, Dr. A.P.J. Abdul Kalam Excellence Award, Best Teacher Award உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர். செல்வம். அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்திருந்தார்.
குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் மற்றும் குளோபல் எஜுகேஷன் மிஷன் சார்பில் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும் சென்னை எஸ். எஸ் ஐதராபாத் பக்கெட் பிரியாணி இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் திரு. அப்துல் சமத் அவர்களுக்கு National Achievement Award மற்றும் India Star Award ஆகிய 2 உயரிய விருதுகள் முன்னாள் நீதிபதி திரு. கே. வெங்கடேசன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கும் விழா பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் சாதனையாளர்களை ஒரே மேடையில் கௌரவித்த மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.