கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ள சங்க அலுவலகத்தில் கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. தலைவராக எஸ்.சங்கர நாராயணன், துணைத்தலைவராக வி.இராஜேந்திரன், செயலாளராக வி.காமராஜ்,துணைசெயலராகஜி.வேலு.பொருளாளராக. லட்சுமணன்,
மாநில குழு உறுப்பினர்களாக
கே.ராஜேந்திரன் மற்றும் ஏ.சேகர்.ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் இதன் தலைவர் மனிதநேயர் நா. சு. செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இதில் கல்லைக்குறிச்சி நகராட்சி நிர்வாகம்.நகர மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்,
நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அளவீடுசெய்து உடனடியாக அகற்றிட வேண்டும்,
நகராட்சி பேருந்து பகுதிகளில் இலவச கழிவறைகள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் வி.காமராஜ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
