கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கல்லக்குறிச்சி சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் பி.எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கல்லக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி நேரங்களில். காலை, மாலை இருவேளையும் மாணவர் சிறப்பு பேரூந்துகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்ள 25.9.2024 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் கல்லக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, கல்லக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், நான்கு முனை சந்திப்பில் நடை மேம்பாலம் அமைத்தல். நான்குமுனை சந்திப்பிலிருந்து நான்கு திசைகளிலும் சாலையை அகலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல். கல்லக்குறிச்சி நகராட்சி பகுதியில் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்துதல், நகராட்சி பேருந்து நிலையத்தின் உள்ளே ஆக்கிரமிப்பு
களை அகற்றவும். அனுமதி பெறாமல் இயங்கும் கடைகளை அகற்றிடவும், பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்து களை பேருந்து நிறுத்த கட்டைகளில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு 08.10.2024 செவ்வாய் கிழமை காலை 11.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது என்றும், கல்லக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை கருவிகளையும் உடனடியாக நிறு விடவும்,போதிய மருத்துவர்கள் பணியாளர்களை நியமித்திடவும். அனைத்து பகுதிக்கும் தடையின்றி தண்ணீர் கிடைத்திடவும். அனைத்து கழிவறை களையும் எந்த நேரமும், தூய்மையாக வைத்திருக்கவும், மருத்துவமனை கட்டிட அறைகளில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதை உடனடியாக சரி செய்ய மருத்துவ மனை நிர்வாகத்தை வலியுறுத்தி வரும் நவம்பர் முதல் வாரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்துவது எனவும், கல்லக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போதிய தண்ணீர் வசதியை உடனடியாக ஏற்படுத்தவும். பிரசவத்திற்கு வரும் மகளிரை பரிசோதித்து விட்டு அறைக்கு வெளியே வெயிலில் காத்திருக்க உட்கார வைக்காமல். அருகில் உள்ள அறைகளில் காத்திருக்க ஆவன செய்யவேண்டும், கல்லக்குறிச்சி நகராட்சி பிரதான சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை தேவையில்லாமல் நிறுத்தி வைத்து ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்திட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கல்லக்குறிச்சி யில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் புறநகர் பேருந்துகள். தியாகதுருகம் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று வர மாவட்ட ஆட்சியர், மோட்டார் வாகன துறை, காவல்துறை, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் இரண்டாவது வாரம் தியாக துருகத்தில் சாலை மறியல் செய்வது எனவும்,
கல்லக்குறிச்சி நகரைச் சுற்றி சுற்று வட்ட பாதையை உடனடியாக அமைத்திட தமிழக அரசுடன் நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில்
மாநில பொருளாளர். பி. குமார்,அமைப்பு செயலாளர் பி. ஜெயப்பிரகாஷ், பிரச்சார செயலாளர் டி. கந்த நாதன்,
மாநில துணை தலைவர் ஆர். சதீஷ்குமார், மாநில துணை செயலாளர் வீ. பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர்கள். வீ. காமராஜ்,வீ. வெங்கடேசன், எம். ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புலவர் அய்யா மோகன் மற்றும்
நிறுவன பொதுச்செயலாளர் மனித நேயர் முனைவர் நா.சு செல்வராஜ் ஆகியோர்
சிறப்புரை ஆற்றினர்.
இறதியில் பிரச்சார பிரிவு செயலர் கந்த நாதன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
