நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 47-வது வார்டில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் அழகு விஜயா அவர்கள் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வெற்றிச்சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின்போது 47-வது வட்டச் செயலாளர் வின்சென்ட், அவைத்தலைவர் மூர்த்தி, வட்ட துணைச்செயலாளர் மாலா, ஜான்சன், நாகராஜ் , சேகர், ரெகோரி, கார்த்திக் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
