தூத்துக்குடி:தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வழக்கறிஞர் கி.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 16 ஆம் நாள் நினைவேந்தல் மற்றும் வீரவணக்கம் நிகழ்வு
பறையர் சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர் அவர்களின் தலைமையில், விழித்தெழு இளைஞர் சங்கம் தலைவர் நீலம் ஜெ.பிரதீப் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரம் 2 வது தெரு நான்கு முணை சந்திப்பு அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் புலி.செ. இளவரச பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் செ.விமல் வங்காளியார், நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்க செயலாளர் தாமோதரன், போல்டன்புரம் கோவில் தர்மகர்த்தா மா. கணேசன், பறையர் சமூக ஆர்வலர்கள் ஜேசுதாஸ்,சுக்கு (எ) அந்தோணிசாமி, வேல்முருகன் (வி.சி.க)சம்பத், (அ.இ.அதிமுக) சரவணகுமார், சங்கர், ஆனந்தராஜ் மற்றும் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

ஜெயந்தன் நன்றியுரை ஆற்றினார்.