சென்னை: டிச, 31
சமூக பாதுகாப்பு (சோஷியல் புரோடக்ஷன்) அமைப்பின் தலைவரும், சமூக சேவகரும், பல சாதனையாளர்களை அடையாள படுத்தி வருபவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களின் புத்தாண்டு தின வாழ்த்து செய்தி தெரிவித்தார்.
மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது: வருகின்ற புதிய ஆண்டினை நமக்கான ஆண்டாக எல்லோரும் மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லங்களை மகிழ்ச்சியாகவும், உள்ளங்களை தூய்மையாகவும், தொழிலை நேர்மையாகவும்,
உறவுகளை உறுதியாகவும்,
நண்பர்களை நற்பண்போடும்,
உடலினை ஆரோக்கியமான தாகவும்,பொருளாதாரத்தில்
பலமாகவும்,பிறருக்கு உதவுவதில் பாலமாகவும்,நம்மை நாமே வடிவமைத்துக் கொண்டு
மனநிறைவோடு,நிம்மதியாக,
சிறிதேனும் நமக்கான வாழ்வை வாழ்ந்திட முற்படுவோம்” என தன்னம்பிக்கையுடன் பிறக்க இருக்கும் புத்தாண்டில் வாழ்த்துகளை தெரிவித்தார்……
