சென்னை:
நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் என்பிஎஸ் அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ பேலஸ் ஹோட்டலில்
நம் பாரத சேவை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் டாக்டர் ந. பால சரவணன் அவர்களின் தலைமையில் உயரிய சிந்தனை மற்றும் மனிதநேயக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் 15 ஆண்டுகள் மருத்துவ துறையில் சிறப்பாக சேவையாற்றி வருவதற்காக
மாமல்லன் இந்திய மருத்துவ அறக்கட்டளை – ஆயுஷ் (AYUSH) பல்நோக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், முதன்மை சித்த மருத்துவ ஆலோசகர் மற்றும் வர்மக்கலை நிபுணருமான “டாக்டர் ச.ம.பிரவீன் ராஜ் மாமல்லன்”
அவர்களுக்கு அன்பு மருத்துவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.