தியாகராய நகர் : நல்லோர் வட்டம் சார்பில் மூன்று மணி நேர அதிரடி சேவை என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகராயநகர் பகுதியிலுள்ள நானா தெரு, தீனதயாளு தெரு, ராஜா தெரு பகுதிகளில் தெருக்களை சுத்தம் செய்தல். சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டுதல், மரக்கன்றுகள் நடுதல்,
சுவர்களில் பொன்மொழி வரைதல்,வீடுகள் அனைத்தும் செம்மை இல்லமாக்க விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகள் 3 மணி நேரத்தில் நடத்தப்பட்டது

இந்நிகழ்வை தியாகராய நகர் ஐந்தருவி அமைப்பின் தலைவரும்,நல்லோர் வட்டத்தின் மாநில மகளிர் அணி பொறுப்பாளருமான. சாந்தி சீனிவாசன் மற்றும் அவரின் மகன் ராம் அவர்களின் தலைமையிலும், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், இந்திய விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் வெற்றிவேல் முன்னிலையிலும் ஆயத்தப் பணி துரிதமாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்
நீதியரசர் திரு. கிருபாகரன் அவர்களின் மனைவி திருமதி.எழிற்பாவை , DRA ஆதித்யா கட்டுமான நிறுவனத்தின் தலைவர் தமன் பிரகாஷ் ,குமரன் ஸ்டோர்ஸ் ரவி, மாநகராட்சி அதிகாரிகள் கண்ணன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் நிகழ்ச்சி குறித்து திட்டமிடல், களப்பணி ஆய்வு, பகுதிவாழ் மக்களின் ஆதரவு, விழிப்புணர்வு, நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்றல் குறித்து நேரடி மற்றும் தொலைபேசி வழி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதில் 136 ஆம் வார்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்களிப்போடு,
நூற்றுக்கும் அதிகமான பொதுமக்களின் துணையோடு அதிரடி சேவை ஆரம்பமானது


சுற்றுப்புற தூய்மை, மரம் வளர்த்தல், அப்துல்கலாம் ஐயா அவர்களின் பத்து கட்டளைகள் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள், பதாகைகளை தாங்கியும், வீடு வீடாகச் சென்று தூய்மை குறித்து விழிப்புணர்வு பகிர்ந்தும், மாநகராட்சி ஊழியர்களின் அபரிமிதமான பங்களிப்போடு தெருக்களை சுத்தம் செய்தல், தெருக்கள் தோறும் மரம் நடுதல், சுவர்களில் வண்ணம் தீட்டுதல் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் என மூன்று மணி நேர விழிப்புணர்ச்சி உற்சாகமாய் அமைந்தது.



