மாத்தூர்: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம்- சென்னை சேத்துப்பட்டு அரிமா சங்கம் மற்றும் மஞ்சம்பாக்கம் அப்பல்லோ டயர்ஸ் ஹெல்த்கேர் சென்டர், மாத்தூர் எம்.என். கண் பார்வை சென்டர் சார்பில் பொது மக்கள் பயன் பெறும் நோக்கில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாத்தூர் சங்க அலுவலக வளாகத்தில் மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அரிமா. முனைவர். எஸ். தங்ககுமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்த முகாம் சங்கத்தின் பொதுச்செயலாளர் அரிமா. எம். அந்தோணிதாஸ் மற்றும் பொருளாளர் அரிமா வி. ஜெயபாலன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் அரிமா என்.ஆர்.டி பிரேம்குமார்( டி சி கன்வென்சன் ) கலந்துக்கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை, காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், நீரிழிவு நோய் பரிசோதனை,கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் இலவசமாக நடத்தப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனை மற்றும் தகுந்த மருந்துகள், மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த இலவச மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் முனைவர் பிரேம்சந்த் மற்றும் பொது வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரிமா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டனர்