தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கம் மற்றும் கலாம் உதவும் கரங்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையாற்றி வரும் மாற்றுத்திறன் சாதனையாளர்கள், மற்றும் சமூக சேவகர்கள், சீர்மிகு ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு சிறந்த மனிதர் கலாம் விருது 2022 வழங்கும் விழா சென்னை – ராமாபுரம் டாக்டர் எம்ஜிஆர் செவித்திறன் குறைவு டையோர் பள்ளியில் தமிழ்நாடு உதவி கரம் மாற்றுத்திறனாளர்கள் நல்வாழ்வு சங்க தலைவர் -ஆடிட்டர் TAP.வரத குட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

இந் நிகழ்வில் கலாம் உதவும் கரங்கள் செயலாளர் V.இன்னாசி முத்து ஜான்சன் அனைவரையும் வரவேற்றார், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் ஆவின் K.கோபிநாத், கலாம் உதவும் கரங்கள் தலைவர் M.கொடியரசு MBA முன்னிலை வகித்தனர்.

முனைவர் K.ஜெயந்த் முரளி IPS காவல் துறை இயக்குனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, முனைவர் R.ஆனந்தகுமார் IAS அரசு செயலர் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறை, டாக்டர்.VG.சந்தோஷம் தலைவர் உலக தமிழ் சங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டாக்டர் A.பிச்சை முன்னாள் இயக்குனர் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், டாக்டர் லதா ராஜேந்திரன், தாளாளர் – டாக்டர் எம்ஜிஆர் செவித்திறன் குறைவு டையோர், வாய் பேச இயலாதோர் பள்ளி,D.M.தருமராஜா D, Astro தலைவர் – ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு,T.வைரமணி மாநில துணை பொதுச்செயலாளர் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்,

M.B.நந்தகுமார் மாநில பொருளாளர் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் நன்றியுரை ஆற்றினார்.