நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் தொண்டு நிறுவனத்தின் மூலம் பயின்றவர். இளம் வயதிலேயே பிறரை ஊக்குவிக்கும் வகையில் எழுதும் திறன் கொண்டவர்.

சென்னை குரோம்பேட்டையிலுள்ள லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 4 மணி நேரத்தில் 261 க்கு மேற்பட்ட கருத்துக்களை எழுதி புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.
இந்த உலக சாதனை நிகழ்வு காலை 11:50 மணி அளவில் ஆரம்பிக்கபட்ட இந்த சாதனை நிகழ்வு மாலை 4:04 வரை தொடர்ந்தது.
இந்நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் உலக சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தலைமை செயல் அதிகாரி கார்த்திக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்க, தலைமை நிர்வாக அதிகாரி செல்வம் உமா முன்னிலை வகித்தார். நிறுவன முதன்மை நிர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன், சாலமன் தினேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்ம பிரியா தலைமை உரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்வினை ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், ஐஸ்வர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
