திருவள்ளூர் மாவட்டம் மாரம்பேடு கிராமம் விவசாயிகளின் ஏரி பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில்,

மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும் பாசன வழியை திமுக நிர்வாகியின் தம்பியின் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது

திராவிட முன்னேற்ற கழகத்தின் சோழவரம் ஒன்றிய துணைத் தலைவராக இருக்கும் கருணாகரன் ஏரிப்பாசனம் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை சரி செய்து விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கான வழியை தமிழக அரசு சரி செய்து தர வேண்டும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும்,

இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றாள் விவசாயிகள் மற்றும் ஊர் மக்களை அனைவரையும் ஒன்று கூட்டி மறியல் செய்யப்போவதாக இவர் தெரிவித்தார்…
