சென்னை : நலிவடைந்து வரும் ஒட்டுநர்களின் பொருளாதாதத்தை மேம்படுத்தும் நோக்கில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் ஐ.டி. இளைஞர்கள் இணைந்து லீப் (LEAP) என்கிற புதிய கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் துவக்க விழா LEAP கால் டாக்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான் ஜோசப் மற்றும் இயக்குனர் மதன் ஆகியோரது முன்னிலையில் சென்னை சாந்தோம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

லீப் (LEAP) கால் டாக்சி நிறுவனத்தின் செயலி(ஆப்)
அறிமுக விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக காங்கிரஸ் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
திருநாவுக்கரசர் MP,
ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் S.A.N.வசீகரன்,
சாந்தோம் பேராலயத்தின் அருட்தந்தை Fr. அருள்ராஜ்,
அன்னை பயோ டீசல் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ராஜ் , லட்சுமணசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மெகா தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஆதவன், ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி. ஸ்டெல்லா மேரி,
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் செங்குட்டுவன், தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் செல்வி. ஜெனிபர் உள்ளிட்ட ஏராளமான கால் டாக்ஸி ஓட்டுனர்களும் கலந்து கொண்டனர்.

