தியாகராய நகர்:
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளரும், கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவரும், சமூக சேவகரும் முனைவருமான கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ.ஹென்றி தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைப்பெற்றது .

இந் நிகழ்வில் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம் மற்றும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அரசியல் ஆலோசகரும், அறிவியல் விஞ்ஞானியுமான பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியாலர்களுக்கு தலைக்கவசம் வழங்கினர்.

மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மூத்த மற்றும் இளம் பத்திரிக்கை யாளர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் பேசிய கிங்மேக்கர் ராஜசேகர் அவர்கள் என் தேசம் -என் மக்கள் என்கிற இலட்சியத்துடன் க
செயல்படுவதாகவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பல்வேறு சமூக பணிகளை செய்து வருவதாகவும், மேலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வித் ஊக்கத் தொகை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு பத்திரிக்கை சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள், மூத்த மற்றும் இளம் பத்திரிக்கை யாளர்களுக்கு அவர்களின் குடும்பத்த்தின் நலன் கருதியே எனது பிறந்த நாளில் தலைக்கவசம் வழங்கினேன் என்று ம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.