சென்னை : ஜூலை, 24
அரிமா மாவட்டம் 324- A1 சார்பில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கான நவீன கழிப்பறை வழங்கும் திட்ட துவக்க விழா தி.நகர் பனகல் பூங்கா அருகில் நடைபெற்றது.

இதை அரிமா ஆளுனர் பி.வி. பிரகாஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.எளிமையாக நடைப்பெற்ற இவ்விழாவில் இத்திட்டத்தின் ஆலோசகர் முன்னாள் மாவட்ட ஆளுனர் அரிமா எல்.கே.எஸ்.சையது அஹமது, மாவட்டத் தலைவர் அரிமா எஸ்.இளங்கோ, அரிமா எம்.பன்னீர்செல்வம், தேனாம்பேட்டை சரக உதவி ஆணையர் கோவிந்தராஜு, பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், தி.நகர் சரக உதவி ஆணையர் கலியன் மற்றும் மாவட்ட செயலாளர்
அரிமா ராஜேஷ் ஜோஷி உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டனர்.