சென்னை: மும்பையிலுள்ள தாதரில் கடந்த 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைப்பெற்ற 47 வது இளையோர் தேசிய அளவிலான கேரம் போட்டியில் வென்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு வீரர்கள் மற்றும் கேரம் பயிற்சியாளர் ச.சக்திவேல் ஆகியோருக்கு பாராட்டு விழா தமிழ்நாடு கேரம் சங்கத்தின் சார்பில் சென்னை, பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கிலுள்ள அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இந்த பாராட்டு விழாவில் கலந்துக்கொண்ட தமிழ்நாடு கேரம் சங்கத்தின் தலைவர் எம்.நாசர்கான், செயலாளர் எ.மரிய இருதயம் மண்டல செயலாளர் பி. வின்சென்ட் , ஆலோசகர் ஜி. விஜயராஜ் ஆகியோர் தேசிய அளவிலான இளையோர் கேரம் போட்டியில் அணி பிரிவு மற்றும் ஒற்றையர் பிரிவில் 8 தங்க பதக்கங்கள்,1 வெள்ளி பதக்கங்கள், 7 வெண்கல பதக்கம் உள்பட மொத்தமாக 16 பதக்கங்களை வென்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தும்,தொடர்ந்து சாதனை படைத்து வரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் ச.சக்திவேல் ஆகியோர்களுக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும், பாராட்டு தெரிவித்தும்,மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



