தொழிலாளர்கள் நலனுக்காகவும் பத்திரிகை துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகத்தை திறந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம்
சென்னை : ஜீன், 01
சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் இதன் நிர்வாக இயக்குநர் ஆக திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார்.
இவர் சமுதாய நலனில் அக்கறை கொண்டு தொழிலாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் மற்றும் பத்திரிக்கை துறையில் புதிய உத்தியை கையாளும் நோக்கில் மெட்ரோ பீப்பிள் என்ற புதிய சொந்த அலுவலகம் திறப்பு விழா நுங்கம் பாக்கத்தில் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில் சம்பிராதாயபடி ஹோமம் வளர்க்க பட்டது. மேலும் இதன் நிர்வாகிகளான சுரேந்திரன், மாதேஸ்வரன், துரை ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சுகுமார் பாலகிருஷ்ணன் தனது துணைவியார் மற்றும் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டார் அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.
