படூர்:இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு படூரில் உள்ள கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 1532 – யு.ஜி, 215 – பி.ஜி, 27 – பி.எச்.டி உள்பட மொத்தம் 1852 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் சிறந்த மதிப்பெண் பெற்ற 57 பேருக்கு கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பதக்கங்கள் மற்றும் ரூ. 8 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது..

மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமை சிறப்பு விருந்தினராக டாக்டர் எம். ரவிச்சந்திரன், செயலாளர், புவி அறிவியல் அமைச்சகம், இந்திய அரசு, கௌரவ விருந்தினராக திரு. எஸ்.சோமநாத், தலைவர், இஸ்ரோ, செயலாளர், விண்வெளி துறை, இந்திய அரசு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை ஜோசப் மார் பர்னபாஸ் சஃப்ராகன், மெட்ரோபாலிட்டன் ஆஃப் மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயம் மற்றும் டாக்டர். ஏ. சிவதாணு பிள்ளை, முன்னாள் தலைமைக் கட்டுப்பாட்டாளர், டிஆர்டிஓ மற்றும் நிறுவனர் சிஇஓ & நிர்வாக இயக்குனர், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் கலந்து கொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்த நிறுவனத்தின் உயரதிகாரிகள்: டாக்டர் திருமதி. எலிசபெத் வர்கீஸ், வேந்தர், HITS; டாக்டர். ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், இணைவேந்தர், HITS; டாக்டர். எஸ்.என். ஸ்ரீதரா, துணைவேந்தர், HITS; மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், HITS. டாக்டர். எஸ். என். ஸ்ரீதரா பல்கலைக்கழக அறிக்கையை வாசித்ததன் மூலம் பட்டமளிப்பு விழா தொடங்கியது. டாக்டர் திருமதி எலிசபெத் வர்கீஸ் தலைமை உரையை நிகழ்த்தி முனைவர் பட்டத்தை வழங்கினார். திரு. எஸ். சோமநாத் மற்றும் அருட்தந்தை ஜோசப் மார் பர்னபாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் பட்டமளிப்பு விழா உரையை டாக்டர் எம்.ரவிச்சந்திரன் வழங்கினார். திரு. எஸ். சோமநாத் சிறப்புரை நிகழ்த்தினார்..

முன்னதாக, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் இன் ஸ்பேஸ் டெக்னாலஜி மையத்தை திரு. எஸ்.சோமநாத், சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் அண்டர் வாட்டர் ரோபோடிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் மையத்தை டாக்டர் எம்.ரவிச்சந்திரன் திறந்து வைத்தனர்.

இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS), 1985 இல் நிறுவப்பட்டது. இது பொறியியல், மேலாண்மை, கட்டிடக்கலை, லிபரல் ஆர்ட்ஸ், அப்ளைட் சயின்சஸ், அலைடு ஹெல்த் சயின்சஸ், டிசைன் மற்றும் சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது.

இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கல்விக் குழுமமான இந்துஸ்தான் குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மாணவர்களின் கல்வித் தேவைகளை போர்த்தி செய்கிறது.
அகாடமிக் டிஜிட்டல் மயமாக்கலுக்கான க்யூஎஸ் அட்வான்ஸ்ட் இ – லேர்னிங்கில் சிறந்து விளங்குவது முதல் இந்தியாவின் சிறந்த தனியார் நிறுவனங்களில் அங்கீகாரம் பெறுவது வரை, HITS பல ஆண்டுகளாக பல விருதுகள், தரச்சான்று மற்றும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டில், என்ஐஆர்எஃப் தரவரிசைகள் 2022 இன் படி, பொறியியல் பிரிவில் 152வது இடத்தையும், கட்டிடக்கலை பிரிவில் 27வது இடத்தையும் பிடித்தது, கேரியர்ஸ் 360 இதழின் ஏஏஏஏ+ மதிப்பீட்டை பெற்றது. மேலும் இந்த இன்ஸ்டிடியூட் வழங்கும் 10 பொறியியல் திட்டங்களுக்கு என்பிஏ அங்கீகாரத்தையும் பெற்றது.
தொழில்துறை சார்ந்த மற்றும் நெகிழ்வான பாடத்திட்டங்களுடன் பல்வேறு களங்களில் 100 க்கும் மேற்பட்ட திட்டங்களை HITS வழங்குகிறது. இதில் தொழில்துறை நிபுணர்களின் பல்வேறு விருந்தினர் விரிவுரைகள் மற்றும் மாணவர்கள் தங்கள் களத்தை பற்றிய உண்மையான அனுபவத்தையும் அறிவையும் பெற தொழில்துறை வருகைகள் அடங்கும். இந்த இன்ஸ்டிடியூட் பல்வேறு ஆராய்ச்சி மையங்களையும் கொண்டுள்ளது. அங்கு மாணவர்கள் பல்வேறு பட்டறைகளில் பங்கேற்கலாம். இது அவர்களின் அறிவை மேம்படுத்த அனுமதிக்கிறது.
HITS ஆனது 100 க்கும் மேற்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைத்துள்ளது. இது மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறைக்கு உலகளாவிய கண்ணோட்டத்தை வழங்கும் பரிமாற்ற திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளிக்கிறது.

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு சமமான முக்கியத்துவத்துடன், மாணவர்கள் வருடாந்திர ஆள்சேர்ப்புக்காக வளாகத்திற்கு வருகை தரும் பல புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு சிறந்த விண்ணப்பதாரராக வடிவமைக்கப்படுகிறார்கள். 2022 இல் மட்டும், 80 சதவீத மாணவர்கள் 6.5 எல்பிஏ முதல் 13 எல்பிஏ வரையிலான கவர்ச்சிகரமான பேக்கேஜ்களுடன் பல்வேறு நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கல்வியாளர்களுடன், HITS தனது மாணவர்களை பல்வேறு பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க ஆதரித்து ஊக்குவிக்கிறது. இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரித்து, சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாக மாற உதவுகிறது.