சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி குழுமத்தின் தலைவர் பாரத சிக்ஸா ரத்னா டாக்டர் ரஜினி மற்றும் டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மலரும் நினைவுகள் டிரஸ்ட் மற்றும் நினைவு இரத்ததான அறக்கட்டளை நிறுவனர் ஆண்டிமடம் எஸ்.முருகன் அவர்களுக்கு குருதி கொடை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக
Global human peace universit y(virtual institute) என்கிற அமைப்பு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி
கௌவுரப்படுத்தியது.