திருவண்ணாமலை:சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் கொழப்பலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் கொழப்பலூரில் அமைந்துள்ள பெரிய ஏரிக்கரையில் சுமார் 10,000 பனை
விதைகள் நடப்பட்டன.

இந்நிகழ்வின் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் அவர்கள் குழுவினருடன் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.

இதில் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு 320 அரசு பள்ளி மாணவிகள் பனை விதைகளை நட்டனர்.

இந்ந நிகழ்ச்சியில் பள்ளியின் இருபாலர் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை வழி நடத்தினர்.
