ஆவடி:இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு கொடுப்போம் என்கிற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செயலாளர் சேவா ரத்னா திருமதி.செல்வாம்பிகை பாலாஜி அவர்களின் தலைமையில், போரா கண் மருத்துவமனையுடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடி மற்றும் 100க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு உணவு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆவடி,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.

இவ்விழாவில் அ.இ.அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம் போரா மருத்துவமனை நிறுவனர் தலைவர் ராகுல் போரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் பிரஸ் குமார், ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல், பாடலாசிரியர் சுதந்திர தாஸ் சிங்கம் புலி திரைப்பட நடிகை நிலா மற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகை கல்பனா முன்னிலை வகித்தனர்.

கே.முனுசாமி,அப்துல் காதர்,முகமது அப்துல் சித்திக், பழனி கண்ணன். நியூஸ் தமிழ் ஆசிரியர் புவனேஸ்வரி மற்றும் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் பாலாஜி மற்றும் சட்ட ஆலோசகர் எஸ்.கே.நவாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கோண்டு விழாவினை சிறப்பித்தனர்.