கிங் மேக்கர்ஸ் ராஜசேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்வு
சென்னை :அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளரும், கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான கிங்மேக்கர்ஸ் டாக்டர் எஸ்.ராஜசேகர் அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த கொடிய கொரோனா தொற்று காலத்தில், சென்னையில் சாலை யோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஏழை, எளிய, மக்களின் பசிப்பிணியை போக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்
(FAIRA) மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம்,”19-ஆம் நாளாக மதிய உணவாக அசைவ உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் 500 சாலையோர ஆதரவற்ற ஏழை எளியோருக்கும் கண்ணகி சிலை அருகில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்கப்பட்டது.
இந்த மகத்தான மக்கள் பணியை, FAIRA கூட்டமைப்பின் நிறுவனரும்,தேசியத் தலைவருமான ஆ.ஹென்றி அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க, FAIRA கூட்டமைப்பின் தலைமை நிலையச் செயலாளர் ஆர்.கார்த்திக், செய்தி தொடர்பாளர், கே.பொன்குமார், ஆற்காடு தம் பிரியாணி எம்.ரமேஷ், மற்றும் தன்னார்வலர்கள் மாரி, ஆர்.விக்னேஸ்வரன், சிவக்குமார் உள்ளிட்ட சக தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து கொண்டு மிக சிறப்பாக மதிய உணவை தேவையுள்ள எளிய மக்களுக்கு வழங்கினர்…


