சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்ட
வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகளாக மகளிருக்கு புடவை மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலை கிழக்கு பகுதிகுட்பட்ட 124 (அ ) வட்டத்தில் உள்ள தெற்கு மாட வீதியில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் 124 (அ) வட்ட கழக செயலாளர் த.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும்,
மயிலை கிழக்குப் பகுதி செயலாளர் எஸ்.முரளி முன்னிலையிலும்,
124 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் விமலா கிருஷ்ணமூர்த்தி நலத்திட்ட உதவியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்
லயன் சி.எஸ் நந்தகுமார் சிறப்பாக செய்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் லாலா தோட்டம் அருண்குமார், 124 (அ )வட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மார்க்கெட் சுரேஷ்,
மயிலை கிழக்குப் பகுதி பொருளாளர் உதயகுமார், உதயசூரியன், ஐயப்பன் வீரபத்திரன், சரவணன், தயாளன், லோகநாதன், ஜெகநாதன், லோகேஸ்வரன், பிரஸ் ரவி, சாய் ரவி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் வர்த்தக அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


