வேப்பேரி: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
எம்.பி. ரஞ்சன் குமார் அவர்கள் தலைமையில் வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு வேப்பேரி காவல் நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் அமைதியான முறையில் மவுன அறவழி போராட்டம் நடைபெற்றது.

இந்த அறவழி போராட்டம் எழும்பூர் பகுதி சர்க்கிள் தலைவர் எம்.டி.சூர்யா மற்றும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்தர் சிவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இந்த அறவழி போராட்டத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முனைவர். ஜெயபாலன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர். ராஜேஷ், தலைவர்களான செல்வம், குபேந்திரன், மன்மதன், சேகர், கலை பிரிவு தலைவர் பா.சந்திரசேகர், கலைப்பிரிவு மாநிலச் செயலாளர் சூளை கே. ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் அயன்புரம் சரவணன், எழும்பூர் பகுதி சர்க்கிள் தலைவர் வழக்கறிஞர் சி.பி.நரேஷ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சஞ்சய், பெரம்பூர் பகுதி மகளிரணி அணி தலைவர் பா. ராஜலட்சுமி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொது செயலாளர் சுமதி, வில்லிவாக்கம் பகுதி சர்க்கிள் தலைவர் வில்லிவாக்கம் ஜான்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளான ஐயப்பன், நித்தியானந்தம், வின்சென்ட், விக்ரம், ஆர்.டி.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு “வன்முறையை எதிர்ப்போம்” “தீவிரவாதத்தை ஒழிப்போம்”
“கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.