சென்னை : அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா சூளை பகுதியிலுள்ள காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் சிறப்பாக நடைபெற்றது.

அன்னையின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோர் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் காட்டூர் நல்லமுத்து ஆச்சாரி தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு தரிசனமாக அன்னையின் தேர் பவனி வலம் வந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் பீமாராவ் குடியரசு கட்சியின் நிறுவனத் தலைவரும்,
வழக்கறிஞருமான லிங்கேசன் அவர்கள் அன்னையின் தேர் பவனி திருவிழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்..

அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய விழாக்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் பயர் கிங்க் பாய்ஸ் ஆலய விழாக்குழு உறுப்பினர்கள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.