சென்னை :உலகத்தில் முதன் முறையாக 9 நாடுகள், 9 மொழிகள், 90 கலைஞர்கள், 90 விதமான திறமைகள் என ஒருங்கிணைத்து 9 மணி நேரத்துக்கு மேலாக ராக் ஸ்டார் மீடியா நடத்திய உலக சாதனை முயற்சி நிகழ்வு காணொலி வாயிலாக நேரடி ஒலிபரப்பு நிகழ்வாக
சென்னை குரோம்பேட்டையில் உள்ள லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் அலுவலகத்தில் நடைப்பெற்றது.மலேசியா ஜொகூர் பாரு ராக் ஸ்டார் மீடியா நிறுவனரும், முனைவருமான பவனேஸ்வரி ராகவி மற்றும் 9 நாடுகள் மற்றும் 9 மொழிகளை சேர்ந்த 90 பல்வேறு தனித்திறமைகளை கொண்ட கலைஞர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்ட்டது.

9 நாடுகளிருந்து. 90 கலைஞர்கள் 9 மொழிகளில் 90 விதமான கலைத்திறனை தொடர்ந்து 9 மணி நேரம் அற்புதமாக வெளிப்படுத்தினர். உலகத்தில் முதல் முறையாக ராக்ஸ்டார் மீடியா மற்றும் சங்கீத நாட்டிய குருகுலம் இதனை ஒருங்கிணைத்து உலக சாதனை படைத்தது. இந்த சாதனை நிகழ்ச்சி மலேசியா மாநிலமான ஜொகூர் பாரு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உலக சாதனை முயற்சிக்காக மாநில மேயர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் டத்தோ புருஷோத்தமன் மற்றும் டத்தோ மணிசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்

இந்த நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் உலக சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார். தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிறுவன முதன்மை நிர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன் சாலமன் தினேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பத்ம பிரியா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வின் தொழில்நுட்ப ஒளிப்பரபினை ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இந்த உலக சாதனை நிகழ்வை சிங்கப்பூரை சேர்ந்த ராம் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.
