சென்னை மண்ணடி பகுதியில் தையல் நிறுவனத்தின் கொத்தடிமைகளாக இருந்த வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு !
மண்ணடி:சென்னைமாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் டிடிஎஃப் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மண்ணடி பகுதியில் குழந்தை தொழிலாளர் ஆணையர் அவர்களின் தலைமையில் மண்ணடி பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் கொத்தடிமைகளாக நடத்த படுவதை கண்டறிந்ததை அடுத்து தடுப்பு அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் இந்த DTF குழுவில் வருவாய், தொழிலாளர் துறை,DCPU- வடக்கு, SJPU -1, DBA சைல்டுலைன், ICWO/HSF SCS மற்றும் BBA ஆகியவை இணைந்து தையல் நிறுவனத்தில் இருந்து 11 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர்.

இந்த சோதனையின் போது 12 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பீகார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆர்.டி.ஓ (வடக்கு) நடத்திய முதன்மை விசாரணையில், அனைத்துக் குழந்தைகளும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பதும், 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வைத்து கொடுமை படுத்தியது தெரியவந்தது.

11 குழந்தைகளில் 10 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.
இதற்கிடையில் குழந்தை தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய இரண்டு முதலாளிகள் மீது தாசில்தார் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன்,
குழந்தைகளை அரசு ஆண்கள் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.
