சென்னை : அக், 25
சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் திறம்பட நிர்வகித்து வருகிறார். சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் ஏழை பள்ளி மாணவர்களின் கல்வி மேற்படிப்பிற்காக உதவித்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

மேலும் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு அலுவலகத்தில் நேற்று ஆயுத பூஜை விழா திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்வில் திரு.சுகுமார் பால கிருஷ்ணன் அவர்களின் துணைவியார் திருமதி.சுதா சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

இந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் அணைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் டிரஸ்டி சுரேந்திரன், அலுவலக மேலாளர்கள் துரை, செந்தில் அருள் மற்றும் தமிழ்நாடு வாகன ஒட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் துணைத் தலைவர் மாதேஷ்வரன் உள்ளிட்ட நிர்வாக அலுவலக ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

எஸ்.ஏ.ராஜ்குமார்

( செய்தியாளர்)

96 77 34 91 96