டிரஸ்ட் 1-2-1 அறக்கட்டளை மற்றும் ஜி.கே.டி. மில்லினியம் அரிமா சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணம்!
சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
டிரஸ்ட் 1-2-1 அறக்கட்டளை மற்றும் ஜி. கே. டி. மில்லினியம் அரிமா சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணத்தை 324M அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநர் பி.வி. பிரகாஷ்குமார் அவர்கள் சென்னை அண்ணா நகர் கோபுர பூங்கா நுழைவாயில் இருந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில்
மூத்த செய்தி வாசிப்பாளரும், தமிழ்நாடு செய்திவாசிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான சி. ஏ. மோகன்ராஜ் மற்றும் சமூக ஆர்வலர் பிரவீன் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
கையேட்டினை வெளியிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றியும்,பீமா மூங்கில் அவசியம் மற்றும் பயன்பாடு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.


மேலும் இந் நிகழ்வில் உலக வெப்பமயத்தி லிருந்து நம்மை பாதுகாக்கவும் தமிழ்நாட்டை குளுமையான நாடாக மாற்றவும், பருவமழை பெற்றிட,அதிக உயிர்காற்றை தரும் பீமா மூங்கில் மரங்களை வளர்க்க வலியுறுத்தியும்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் உயரிய நோக்கத்துடன் பீமா மூங்கில் மரக்கன்றுகள் கொடுத்தும் சென்னை முழுவதும் கடந்த 29-05-2023 முதல் 31-05-2023 வரை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயனம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பசுமை நாயகன் உமாநாத் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட சென்சார் போர்டு உறுப்பினர் வழக்கறிஞர் பூபாலன் மற்றும் நிமிலன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
பீமா மூங்கில் கண்டுபிடிப்பாளர் முனைவர் பாரதி அவர்கள் ஆலோசனையின் பேரில் இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.





