சென்னை: தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிடக்கோரி, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவனயீர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு,
தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் தலைவர்
பி.காளிதாசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி யின் மாநிலத் தலைவர்,
எஸ்.காசி விஸ்வநாதன் அவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்,
டாக்டர் ஏ.ஆர்.சாந்தி அவர்கள்
கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் எம்.சங்கர் , சரவணன் ,கணேசன், ராஜா,கண்மணி,ஜனனி,மாலதி ஆகியோர் உரையாற்றினர்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின்
பொதுச் செயலாளர்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அவர்கள்
நிறைவுரையாற்றினார்.

மேலும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200 பெண்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

