காந்தியவாதி மற்றும் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளில் புகழ் வணக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு !
சைதாப்பேட்டை:காந்தியவாதியும், மது ஒழிப்பு போராளியுமான சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம்
மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மது ஒழிப்பு போராளி
வீ.சுந்தர் அவர்கள் ஒருங்கிணைப்பில்
சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பத்ம ஸ்ரீ பாலம் கல்யாண சுந்தரம், தமிழ்நாடு மண்பானை தொழிலாளர் அமைப்பின் தலைவர் சேம.நாரயணன், சோஷியலிஸ்ட் கட்சியின் இந்தியா மாநில தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம், பத்திரிக்கையாளர் சங்க
தலைவர் டி.எஸ்.ஆர் . சுபாஷ், மூத்த வழக்கறிஞர் தி. சிவஞானசம்பந்தம்.மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் வேந்தன் ,
ஆம் ஆத் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் ஜோசப், மாநில மகளிரணி தலைவி ஸ்டெல்லா மேரி,இந்திய
ஒற்றுமை இயக்க நிர்வாகி பாலமுருகன், சமுக ஆர்வலர்கள் ஜான் போஸ்கோ , ரெங்கநாதன், ரகுபதி,தனசேகரன். ரெங்கநாதன், பெண்ணுரிமை இயக்கயத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர்.







