அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

வேலூர்:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா வேலூரிலுள்ள தனியார் விடுதியில் இதன் தலைவர் வழக்கறிஞர் முனைவர்
டி.கே. சத்தியசீலன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.



இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசர் எஸ். கே கிருஷ்ணன், சென்னை மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், முன்னாள் தலைவருமான வழக்கறிஞர் டி. செல்வம், முன்னாள் ஆந்திர மாவட்ட நீதிபதி ஜே. ஹரிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.




மேலும் இந் நிகழ்வில் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.






மேலும் இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், வேலூர் மாவட்ட வழக்கறிஞர்கள், சமூக சேவையாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.









