அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளை யொட்டி சோழிங்க நல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாணவரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கே.பி. கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை சால்வை அணிவித்தும்.மலர் கொத்து கொடுத்தும், நினைவு பரிசு கொடுத்தும் மரியாதை படுத்தினர்.

மேலும் இந்த பிறந்த நாள் விழா நிகழ்வில் சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி துணை செயலாளர் பி.எஸ்.வெற்றி,சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எம்.ஆர்.கெளதம், மாவட்ட பிரதிநிதி சி.எஸ்.செல்வம் ஆகியோர் இணைந்து சால்வை அணிவித்தும்,நினைவு பரிசு வழங்கியும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் மணிகண்டன், ஹரிஹரன் மற்றும் பிரின்சன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் கே.பி.கந்தன் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டது